கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற அலுவலகத்தை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் திறப்பு

Update: 2021-07-11 20:35 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை பகுதியில் தஞ்சை சாலையில் புதிய சட்டமன்ற அலுவலகத்தை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை முன்னிலையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர்  இன்று திறந்து வைத்தனர்.

இதில், வடக்கு மாவட்ட திமுக  பொறுப்பாளர் கே.கே. செல்லபாண்டியன் உள்பட கட்சி நிர்வாகிகள்  மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். 


Tags:    

Similar News