கீரனூர் அருகே அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்த திமுக நிர்வாகி
கீரனூர் அருகே அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை முன்னாள் அரசு வழக்குரைஞரும் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான செல்லபாண்டியன் திறந்து வைத்தார்
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, கீரனூர் அருகில் தென்னதிரையன்பட்டி பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை முன்னாள் அரசு வழக்குரைஞரும் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்லபாண்டியன் திறந்துவைத்தார்
தென்னதிரையன்பட்டி பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தேவை என்று அப்பகுதி விவசாயிகள் தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அப்பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி வழங்கியதை அடுத்து அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை முன்னாள் அரசு வழக்குரைஞரும் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்லபாண்டியன் திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில், விராலிமலை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சத்தியசீலன், முன்னாள் தென்னத்திரையன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் குமரவேல், ஒன்றிய கவுன்சிலர் கண்ணன் மற்றும் கழக நிர்வாகிகள் விவசாயிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.