புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கீழநாஞ்சூர் கிராமத்தில் சில நாட்களுக்கு முன்பு அங்கு உள்ள உள்ள சிவன் கோவில் சிலைகள் துண்டு துண்டாக உடைக்கப்பட்டு கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் காவல்துறையிடம்புகார் மனு அளிக்கப்பட்டது.
காவல்துறை மூலம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இன்று சாமி சிலைகள் உடைக்கப்பட்ட இடத்தை மற்றும் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார் . இதில் குளத்தூர் வட்டாட்சியர் பெரியநாயகி, அப்பகுதிகளில் ஆய்வை மேற்கொண்ட பொழுது கீழநாஞ்சூர் கிராமத்தை சேர்ந்த நல்லுசாமி மகன் மனநலம் பாதிக்கப்பட்ட குணசேகரன் என்பவரால் சாமி சிலைகள் உடைக்கப்பட்டது என்பது தெரியவந்தது.
இதனை அடுத்து மாவட்ட மனநல மருத்துவர்கள் குழு உடன் சென்று குணசேகரன் என்பவரை கண்டறிந்து மனநல மருத்துவர்களால் அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும்,மனநல மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக குணசேகரன் அனுப்பி வைக்கப்பட்டார்.