கீரனூர் அருகே மதுபோதையில் பிரச்சனை செய்தவர்களை தட்டிக்கேட்ட இளைஞரை அடித்து கொலை..!
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே ஆலங்குடி எனுமிடத்தில் டீக்கடையில் நின்று கொண்டு குடிபோதையில்தகராறில் ஈடுபட்டவர்களை அதே கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார்(32) மற்றும் அவரது சகோதரர் பூவிழி அரசன் ,தந்தை ஜம்புலிங்கம், ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த மது போதையில் இருந்த நரியப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தர்மதுரை, சிலம்பரசன், கருப்பையா, உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பல் வினோத் குமார் உள்ளிட்டோரை கடுமையாக தாக்கியுள்ளனர். இச் சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த வினோத் குமார் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் அவரது தந்தை சகோதரர் உள்ளிட்ட மூவர் படுகாயங்களுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து 10 பேர் மீது வழக்கு பதிவு செய்த மண்டையூர் போலீசார் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கருப்பையா,முனியாண்டி,ரஞ்சித்குமார், அஜித்,பாரதி, உள்ளிட்ட 6 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் தப்பியோடிய 4 பேரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.