இறந்தவருக்கு போட்ட பட்டாசால் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது..
இறந்தவரின் உடலை மயானத்திற்கு கொண்டு சென்றபோது பட்டாசு வெடித்ததில் அருகே இருந்த குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து நாசமம்..;
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியைச் சேர்ந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.உயிரிழந்த நபரின் உடலை அவரது உறவினர்கள் இன்று புதுக்கோட்டை சாலையில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்வதற்காக கொண்டு சென்றனர்.
அப்போது பட்டாசுகள் வெடித்தவாறே அவர்கள் சென்றபோது திருமனஞ்சேரி விளக்கு ரோடு அருகே உள்ள பிரகதாம்பாள் என்பவரின் குடிசை வீடு மீது பட்டாசு விழுந்துள்ளது.குடிசை வீட்டின் மீது பட்டாசு விழுந்ததில் அந்த வீடு தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து வீட்டில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் இச்சம்பவம் குறித்து கறம்பக்குடி தீயணைப்பு துறையினருக்கு தகவல்.
இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த கறம்பக்குடி தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் தீயை அணைக்க முயன்றனர்.ஆனால் அதற்குள் குடிசை வீடு முற்றிலும் எரிந்து வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சாம்பலாயின. இச்சம்பவம் குறித்து கறம்பக்குடி போலீசார் பட்டாசு வெடித்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.