புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலை மறியல் செய்த மாணவ மாணவிகள் எம்.பி பேச்சுவார்த்தை நடத்தியதால் பாேராட்டத்தை கைவிட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி ஊராட்சி ஒன்றியம் மருதங்குடி ஊராட்சியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் சுமார் 700 க்கும் மேற்பட்டோர் கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் நீண்ட நாள் கோரிக்கையாக தங்களுக்கு பேருந்து வசதி செய்து தர வேண்டும் என்று அரசிடம் பல முறை கோரிக்கை வைத்து ஏற்கனவே இதற்கு முன்பு பல போராட்டம் நடத்தப்பட்டது. அதன் பிறகு மீண்டும் கடந்த ஒரு மாதமாக பேருந்துகள் இயக்கப்படாததால் இன்று காலை நான்கு ரோடு சாலையில் மாணவ மாணவிகள் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த திருநாவுக்கரசர்.எம்.பி,மாணவ மாணவிகளை பார்த்து தனது வாகனத்தை நிறுத்தி கீழே இறங்கிச் சென்று மாணவர்களிடம் விபரம் கேட்டறிந்தார்.மாணவர்கள் தங்கள் குறைகளை கூறினர். உடனே புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், போக்குவரத்து அதிகாரியிடம் பேசி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதன் பின்னர் மாணவ-மாணவிகள் தங்களின் சாலை மறியல் முயற்சியைக் கைவிட்டனர்.