மீனவ கிராமத்தில் ஒப்பந்த அடிப்படையில் சாகர் மித்ரா நியமனம்: ஆட்சியர் தகவல்

தகுதியுள்ள நபர்கள் 04.01.2024-க்குள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநரிடம் விண்ணப்பிக்கலாம்

Update: 2023-12-19 13:30 GMT

பைல் படம்

சென்னை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர்  அறிவிக்கையின் படி, மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தின் கீழ் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் தமிழகத்தில் சாகர் மித்ராக்கள் ஒப்பந்த அடிப்படையிலான நியமனம் செய்ய மாவட்ட ஆட்சியரின் வாயிலாக செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தி துரித நடவடிக்கை மேற்கொண்டு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நியமனம் செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்திட்டத்தினை செயல்படுத்திட ஏதுவாக புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட 32 மீனவ கிராமங்களில் காலியாக உள்ள ஏம்பவயல் மீனவ கிராமத்தில் ஒப்பந்த அடிப்படையில் சாகர் மித்ரா நியமனம் செய்ய வேண்டியுள்ளது.

இப்பணியில் சேர்வதற்கான அத்தியாவசிய தகுதிகள், Minimum Bachelor Degree in Fisheries Sciences (OR) Minimum Bachelor Degree in Marine Biology (OR) Minimum Bachelor Degree in Physics, chemistry, Botany, Zoology, Biochemistry, Microbiology, (WITH) Addition Knowledge in Information Technology (IT) shall be given preference ஆகும்.

தகுதி வரம்பு, விண்ணப்பம் செய்த நபர் தொடர்புடைய மீனவ கிராமம் / வருவாய் கிராமத்தை சேர்ந்த தாலுகாவில் இருத்தல் வேண்டும். தொடர்புடைய மீனவ கிராமம் / வருவாய் கிராமத்தை சேர்ந்த தாலுகாவில் தகுதியானவர்கள் இல்லை என்றால் அருகில் உள்ள மீனவ கிராமம் / வருவாய் கிராமம்/ தாலுகாவை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும் (சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்குட்பட்ட). வயது வரம்பு 01.07.2023 இல் உள்ளவாறு 35 வயதுக்கு மேற்படக்கூடாது. ஊதியம் மாதம் ஒன்றிற்கு ஊக்கத்தொகை 5.15,000/- 

எனவே மேற்குறிப்பிட்ட ஒரு மீனவ கிராமத்தில் சாகர் மித்ரா நியமனம் செய்ய தகுதியுள்ள நபர்கள் 04.01.2024-க்குள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தினை சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News