216 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கிய அமைச்சர்கள்
புதுக்கோட்டை அருகே 216 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் வழங்கினார்;
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு 216 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல் மற்றும் சிட்டா, அடங்கல் ஆகியவற்றிற்கான ஆணைகள் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சியில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில், அறந்தாங்கி கோட்ட அளவில் 177 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களையும், 20 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான ஆணைகளையும் மற்றும் 19 பயனாளிகளுக்கு கிராம கணக்குகளில் பதிவின்றி இருந்த விலையில்லா வீட்டுமனை பட்டாக்களுக்கு சிட்டா,
அடங்கல் ஆகியவற்றிற்கான ஆணைகளையும் என மொத்தம் 216 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல் மற்றும் சிட்டா, அடங்கல் ஆகியவற்றிற்கான ஆணைகளை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி , சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர், மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா தலைமையில் இன்று (28.12.2023) வழங்கினார்கள்.
பின்னர் மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது: மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றை பூர்த்தி செய்வதே மக்களாட்சியின் தத்துவமாகும். அதனடிப்படையில் இருப்பிடத்தின் தேவையினை பூர்த்தி செய்திடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அதிக அளவிலான வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கி முத்திரை பதித்து வருகிறார்கள். இதுபோன்ற திட்டங்கள் அனைத்தும் மற்ற மாநிலங்களும், தங்களது மாநிலங்களில் செயல்படத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
எனவே பொதுமக்கள் அனைவருக்கும் இன்று வழங்கப்பட்டுள்ள விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை பெற்று தங்களது வாழ்வினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
இதன்மூலம் அரசுத்துறைகளின் சேவைகளை பெற பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்படும் ‘மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் மூலம் மனுக்களை அளித்து பயன்பெறவும், இலவச வீட்டுமனைப் பட்டாக்களை பெற்ற பயனாளிகள் அனைவரும் உரிய முறையில் இதனை பயன்படுத்திக்கொண்டு பொருளாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
பின்னர், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் , துவரடிமனை பகுதியில், பகுதிநேர நியாய விலைக்கடையினை திறந்து வைத்தார். இதன்மூலம் இப்பகுதி பொதுமக்கள் குடிமைப் பொருட்கள் பெறுவதற்கு நீண்ட தூரம் சென்று வருவது தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம், அறந்தாங்கி நகர்மன்றத் தலைவர் ஆனந்த், அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், நகர்மன்ற துணைத் தலைவர் தி.முத்து (எ) சுப்ரமணியன், வட்டாட்சியர்கள் ஜபருல்லா (அறந்தாங்கி), சேக் அப்துல்லா (மணமேல்குடி), உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்,