அரசு ஆரம்ப சுகாதார நிலையம்: வாலிபர் சங்கம் வலியுறுத்தல்

திருநாளூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டுமென வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது;

Update: 2023-10-14 11:30 GMT

அறந்தாங்கி ஒன்றியம் திருநாளூர் தெற்கு பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதிய கிளை தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே சுமார் 6,000 மக்கள் தொகை கொண்ட திருநாளூர் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்  அமைக்க வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் திருநாளூர் தெற்கு பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதிய கிளை தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு கிளைத் தலைவர் டி.ஜெகதீஸ்வரன் தலைமை வகித்தார். செயலாளர் எம்.பிரபாகரன் முன்னிலை வகித்தார்.சங்கத்தின்கொடியை ஏற்றி மாவட்டச் செயலாளர் ஆ.குமாரவேல் சிறப்புரையாற்றினார். முன்னாள் மாவட்டத் தலைவர் ஆர்.கர்ணா, ஒன்றியச் செயலாளர் எஸ்.பாண்டிகௌதம், தலைவர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் சங்கர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

திருநாளூர் ஊராட்சியில் பல்வேறு பகுதிகளில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காலை ஒன்பது மணி அளவில் ஊருக்குள் வந்து சென்ற அரசு பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும். குளத்து மண்ணை திருடி விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியகுளம் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த வேண்டும்.

நூறுநாள் வேலை திட்டத்தில் நடைபெறும் நடைமுறைகேடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டும். சுமார் 6,000 மக்கள் தொகை கொண்ட திருநாளூர் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கால்நடை மருத்துவமனை கொண்டுவரப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News