பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: அமைச்சர் வழங்கல்
மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 521 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 521 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டம், பள்ளிக்கல்வித்துறை சார்பில், மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 521 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார்.
அதன்படி கறம்பக்குடி வட்டம், ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட வருவாய் அலுவலர் . மா.செல்வி ள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், 165 மாணவ, மாணவிகளுக்கும், கறம்பக்குடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 125 மாணவ, மாணவிகளுக்கும், கறம்பக்குடி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 231 மாணவ, மாணவிகளுக்கும் என ஆகமொத்தம் 521 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்ததாவது;
தமிழ்நாடு முதலமைச்சர் மாணவ, மாணவியர்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி கறம்பக்குடி பகுதிகளில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 521 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த மிதிவண்டிகள் பள்ளி செல்லும் குறிப்பாக கிராமப்புறங்களில் இருந்து செல்லகூடிய மாணவ, மாணவிளுக்கு பேருதவியாக இருக்கும், மேலும் இப்பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், கழிவறை வசதிகள் உள்ளிட்டவைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக் கல்வித்துறைக்கு அதிக அளவில் ரூ.36,500 கோடி நிதிஒதுக்கீடு செய்துள்ளார்கள். இதன் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு முன்னோடித் திட்டங்களை செயல்ப டுத்தி வருகிறார்கள். அதன்படி அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் பயில்வதற்கு மிகுந்த ஆர்வம்காட்டி வருகின்றனர்.
மேலும் கறம்பக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 19 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான கால்பந்து போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று மாநில அளவில் பங்கேற்க 16 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
பகுத்தறிவு பகலவன் பெரியார் அவர்கள் ஆண்களுக்கு இணையாக பெண்களும் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் பெண்கள் உயர்கல்வி பெறும் வகையில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பயன்படுத்தி நன்றாக கல்வி பயின்று மாணவ, மாணவிகள் சிறந்து விளங்கி இதுபோன்ற சிறந்த மேடைகளை வருங்காலத்தில் அலங்கரிக்க வேண்டும் என சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட கல்வி அலுவலர் ராஜாராம், கறம்பக்குடி ஒன்றியக் குழுத் தலைவர் மாலா ராஜேந்திரதுரை, ஆத்மா கமிட்டித் தலைவர் முத்துகிருஷ்ணன், கறம்பக்குடி பேரூராட்சித்தலைவர் முருகேசன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.