வளர்ச்சிப்பணிகள்: அமைச்சர் மெய்யநாதன் பூமி பூஜை செய்து தொடக்கம்
அறந்தாங்கி மற்றும் திருவரங்குளம் ஒன்றியங்களுக்குள்பட்ட பகுதிகளில் ரூ.99.84 லட்சத்தில் வளர்ச்சித்திட்டப்பணிகள் தொடக்கம்
புதுக்கோட்டை மாவட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் அறந்தாங்கி மற்றும் திருவரங்குளம் ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில்ரூ.99.84 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை சுற்றுச் சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ், அறந்தாங்கி மற்றும் திருவரங்குளம் ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் ரூ.99.84 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இன்று (25.11.2022) பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் 2021-2022 -ன் கீழ், ஊருணிகள் ஆழப்படுத்துதல், சிமெண்ட் சாலை அமைத்தல், நெற்களம் அமைத்தல், பள்ளிகளுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள், அறந்தாங்கி ஒன்றியம், மன்னகுடி ஊராட்சியில் ரூ.36,60,200 மதிப்பிலும் மற்றும் திருவரங்குளம் ஒன்றியம், வெண்ணாவல்குடி ஊராட்சியில் ரூ.63,24,000 மதிப்பிலும் என ஆகமொத்தம் ரூ.99,84,200 மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இன்றைய தினம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் கல்வி வளர்ச்சியில் தமிழகம் முன்னணி மாநிலமாக விளங்க வேண்டும் என்ற அடிப்படையில் கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் கொரோனா பேரிடர் காலத்தில் மாணவ, மாணவிகளின் கற்றல் கற்பித்தல் திறன் தடைபடாமல் தொடர்ந்திடும் வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை செயல்படுத்தினார்கள்.
மேலும் அரசுப் பள்ளிகளில் பயின்று உயர் கல்விகளுக்குச் செல்லும் மாணவிகள் அனைவரும் பொருளாதாரத்தின் காரணமாக கல்வியை இழந்து விடக்கூடாது என்ற அடிப்படையில் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் 'புதுமைப் பெண்" என்ற புரட்சிகரமான திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். மேலும் ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் உயர் கல்வி பயில வேண்டும் என்ற அடிப்படையில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்கப்பட்டுள்ளது.
இதுபோன்று கல்வி வளர்ச்சிக்காக தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தப்படும் திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, தங்களது வாழ்வினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, வருவாய் கோட்டாட்சியர்கள் முருகேசன் (புதுக்கோட்டை), சு.சொர்ணராஜ் (அறந்தாங்கி), திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோகுலகிருஷ்ணன், ஆயிஷாராணி, சிங்காரவேலன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.