மத்திய அரசின் மக்கள் விரோதப் பட்ஜெட்டைக் கண்டித்து சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒன்றியத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசின் மக்கள் விரோதப் பட்ஜெட்டைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்
மோடி தலைமையிலான மத்திய அரசின் மக்கள் விரோதப் பட்ஜெட்டைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒன்றியத் தலைநகரங்களில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அறந்தாங்கியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் தென்றல் கருப்பையா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் கண்டன உரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் கே.தங்கராஜ் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பேசினர்.
கறம்பக்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு ஒன்றியச் செயலாளர் பி.வீரமுத்து தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பொன்னுச்சாமி, தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.காமராஜன் உள்ளிட்டோர் பேசினர்.
கந்தர்வகோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு ஒன்றியச் செயலாளர் ஜி.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். தெற்கு ஒன்றியச் செயலாளர் வி.ரெத்தினவேல் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராமையன் உள்ளிட்டோர் பேசினர்.
ஆலங்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திருவரங்குளம் மேற்கு ஒன்றியச் செயலாளர் எல்.வடிவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர், நகரச் செயலாளர் ஏ.ஆர்.பாலசுப்பிரமணியன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பாண்டிச்செல்வி உள்ளிட்டோர் பேசினர்.
ஆவுடையார்கோவிலில் ஒன்றியச் செயலாளர் நெருப்பு முருகேஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர், மாவட்டக்குழு உறுப்பினர் சி.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பேசினர்.அன்னவாசலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் எம்;.ஜோஷி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம், மாவட்டக்குழு உறுப்பினர் டி.சலோமி உள்ளிட்டோர் பேசினர்.
திருமயத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் சி.ஜீவானந்தம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.அன்புமணவாளன், ஒன்றிய அமைப்பாளர் துரை.நாராயணன் உள்ளிட்டோர் பேசினர்.அம்மாப்பட்டினத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மணமேல்குடி ஒன்றியச் செயலாளர் கரு.ராமநாதன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் சி.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பேசினர்.