அறந்தாங்கியில் அம்பேத்கர் சிலை அமைக்க அனைத்துக் கட்சியினர் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் டாக்டர் அம்பேத்கர் சிலை நிறுவுவதற்கு பரிந்துரை கடிதம் அளிக்க வலியுறுத்தினர்;

Update: 2022-12-02 13:30 GMT

அறந்தாங்கியில் அம்பேத்கர் சிலையை அமைக்க வலியுறுத்தி மனு அளித்த அனைத்துக்கட்சி  நிர்வாகிகள்

அறந்தாங்கியில் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி கோரி அனைத்துக் கட்சியினர் ஆட்சியரிடம் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் டாக்டர் அம்பேத்கர் சிலை நிறுவுவதற்கு பரிந்துரை கடிதம் அளிக்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமைறு அனைத்துக் கட்சியினர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, மதிமுக, விசிக, திக, தேமுதிக, மனித நேய மக்கள் கட்சி, சிபிஐ(எம்.எல்), பாமக உள்ளிட்ட 34 அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் சேர்ந்து வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கோரிக்கை மனு  அளித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: அறந்தாங்கி நகரம் செக்போஸ்ட் அருகே சட்ட மேதை அம்பேத்கரின் முழு உருவ சிலையை நிறுவிட வலியுறுத்தி கடந்த 09.02.2006 அன்று எஸ்சி, எஸ்டி அரசு ஊழியர் கூட்டமைப்பு சார்பில் அனுமதி கோரப்பட்டது. அரசு விதித்த நிபந்தனைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அறந்தாங்கி நகர்மன்றத் தீர்மானம், சிலை அமைய உள்ள இடத்தின் வரைபடம், நெடுஞ்சாலைத்துறை, வருவாயத்துறை மற்றும் காவல்துறை வழங்கிய தடையில்லா சான்று உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டு பல வருடங்கள் ஆகின்றன.

ஆனால், இதுநாள் வரை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அம்பேத்கர் சிலை அமைப்பதற்கான பரிந்துரைக் கடிதத்தை அரசுக்கு அனுப்பவில்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் பலமுறை வலியுறுத்தப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த 23.11.2022 அன்ற புதுக்கோட்டையில் நடைபெற்ற சட்டப்பேரவை பொது கணக்குக்குழு கூட்டத்திலும் சிலை அமைக்க மாவட்ட ஆட்சியர் பரிந்துரைக்க வேண்டுமெ சட்டப்பேரவை குழுவினரால் பரிந்துரை செய்யப்பட்டது.

இந்நிலையில், சிலை அமைப்புக் குழுவின் சார்பில் வெள்ளிக்கிழமை அனைத்துத்தரப்பினரின் கோரிக்கையை ஏற்று அறந்தாங்கியில் சிலை அமைக்க மாவட்ட ஆட்சியர் அரசுக்கு உடனடியாக பரிந்துரைக் கடிதம் அனுப்ப வலியுறுத்தி கோரிக்கை மனுவை மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வியிடம் அளிக்கப்பட்டது.

சிலை அமைப்புக்குழுத் தலைவர் கே.எம்.சுப்பையா தலைமையில் நடைபெற்ற இந்த மனு அளிக்கும் குழுவில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், சிபிஐ மாவட்டச் செயலாளர் த.செங்கோடன், விடுதலைச் சிறுத்தைகள் மாநில துணைச் செயலாளர் தெ.கலைமுரசு, மாவட்டச் செயலாளர் செப.பாவாணன், முஸ்லீம் லீக் அஸ்ரப்அலி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி.ஜீவானந்தம் , சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.நாகராஜன், எஸ்.ஜனார்த்தனன், சிபிஐ மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ஏ.ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

நாடு முன்னேற்ற பாதையில் செல்வதற்கு இந்திய அரசியல் சட்டங்கள் மிகவும் முக்கியம் என உணர வைத்த முதல் தலைவர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் ஆவார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய பல தலைவர்களில் அம்பேத்கர் மிகவும் முக்கிய தலைவர். தீண்டாமை என்ற கொடிய நோயை ஒழித்து அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று நினைத்தவர் அம்பேத்கர்.

Tags:    

Similar News