புதுக்கோட்டையில் இரட்டை கொலையை கண்டித்து வி.சி.க ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டையில் இரட்டை கொலையை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அரக்கோணத்தில் நடைபெற்ற சூர்யா, அர்ஜுனனின் இரட்டைப் படுகொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் இறந்த இருவருக்கும் நீதி வழங்க வேண்டும், தமிழகத்தில் தொடரும் சாதிவெறியை கட்டுப்படுத்தி சட்ட ஒழுங்கை சீர்படுத்த வேண்டும், படுகொலையான இருவர் குடும்பத்திற்கும் தலா ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும்,
தமிழகத்தில் தொடர் சாதி மோதலை உண்டாக்கும் பாமகவை தடை செய்ய வேண்டும், உயிருக்கு போராடும் பாதிக்கப்பட்ட மூவருக்கும் தலா 50 லட்சம் இழப்பீடு மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி 50-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.