பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சர் தொடக்கம்
ரூ.3.61 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டி அமைச்சர் தொடக்கி வைத்தார்.;
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் (06.09.2023) ரூ.3.61 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்களை முன்னேற்றும் வகையில் அதிக முக்கியத்துவம் கொடுத்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படையில், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், ரூ.3.61 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டி தொடக்கி வைக்கப்பட்டது.
அதன்படி, திருவரங்குளம் ஒன்றியம், களங்குடி ஊராட்சி, பாலகுடிப்பட்டியில், நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் அமைக்கும் பணி அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கப்பட்டது. மேலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ், திருவரங்குளம் ஒன்றியம், தெட்சிணாபுரம் ஊராட்சியில் ரூ.41 லட்சம் மதிப்பீட்டிலும், கே.வி. கோட்டை ஊராட்சியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டிலும் பணிகள் அடிக்கல் நாட்டி தொடக்கி வைக்கப்பட்டது.
முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்;பாட்டுத் திட்டத்தின்கீழ், திருவரங்குளம் ஒன்றியம், தெட்சிணாபுரம் ஊராட்சியில் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் வேங்கிடகுளம் - வல்லத்திராக்கோட்டை சாலை முதல் கடையான்தோப்பு வரை சாலை அமைக்கும் பணியினையும், வேங்கிடகுளம் ஊராட்சியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் வேங்கிடகுளம் முதல் பெரும்பள்ளம் வரை சாலை அமைக்கும் பணியினையும்,
கோவிலூர் ஊராட்சியில் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் மைக்கேல்பட்டி சாலை அமைக்கும் பணியினையும், மாஞ்சான்விடுதி ஊராட்சியில் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் புதுக்கோட்டை- பட்டுக்கோட்டை சாலை முதல் வீரப்பட்டி வரை சாலை அமைக்கும் பணியினையும், புதுக்கோட்டைவிடுதி ஊராட்சியில் ரூ.14.40 லட்சம் மதிப்பீட்டில் சூத்தியன்பட்டி சாலை அமைக்கும் பணியினையும் மற்றும் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் மேலநெம்மக்கோட்டை பிள்ளையார்கோவில் பின்புறம் ஆதிதிராவிடர் காலனியில் சாலை அமைக்கும் பணியினையும் இன்றையதினம் அடிக்கல் நாட்டி தொடக்கி வைக்கப்பட்டது.
இந்த புதிய வளர்ச்சித் திட்டப் பணிகள் அனைத்தையும் உயர்ந்த தரத்துடன், விரைவாக முடித்து பொதுமக்களின் பயன் பாட்டிற்கு கொண்டுவர தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில், திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் எஸ்.பாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் கோகுலகிருஷ்ணன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்;