கீரமங்கலம் பேரூராட்சியில் ரூ.1.80 கோடி மதிப்பில் சாலை திட்டப் பணிகள் தொடக்கம்
கீரமங்கலம் பேரூராட்சியில்,ரூ.1.80 கோடி மதிப்பிலான சாலை திட்டப் பணிகளை அமைச்சர் மெய்யநாதன் தொடக்கி வைத்தார்;
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பேரூராட்சியில், ரூ.1.80 கோடி மதிப்பிலான சாலை திட்டப் பணிகளை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல்நாட்டி துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு முன்னோடித் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி, நகரப் பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான சாலைவசதி, குடிநீர்வசதி உள்ளிட்டவைகளை நிறைவேற்றும் வகையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், கீரமங்கலம் பேரூராட்சியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.87 இலட்சம் மதிப்பீட்டில் மண் சாலைகளை 1 கி.மீட்டர் தூரத்திற்கு பேவர் பிளாக் சாலையாக மாற்றும் பணி திட்டப் பணியின்கீழ் ரூ.93 இலட்சம் மதிப்பீட்டில் மண் சாலையை 1.2 கி.மீட்டர் தூரத்திற்கு தார்ச் சாலையாக மாற்றும்; பணிகளை, மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்ம் அடிக்கல்நாட்டி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில், கீரமங்கலம் பேரூராட்சி தலைவர்கே.சி.சிவக்குமார், பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் (திருச்சி மண்டலம்) ஜீவாசுப்பிரமணியன், கீரமங்கலம் பேரூராட்சி துணைத் தலைவர் முத்தமிழ்ச்செல்வி, கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் ச.இளவரசி, உதவிப் பொறியாளர் ஆர்.உதயகுமார், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.