குப்பக்குடி ஊராட்சியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி, அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம் குப்பக்குடி ஊராட்சியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சயில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார்.

Update: 2021-06-09 05:15 GMT

புதுக்கோட்டை மாவட்டம் குப்பக்குடி ஊராட்சியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கிவைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

அதன்படி இன்று காலை புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவரங்குளம் அருகே உள்ள குப்பகுடி ஊராட்சியில் கல்யாணபுரம் பைங்கி குளத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் மரக்கன்றுகள் நட்டு வைத்தார். இந்த நிகழ்வில் மரம் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்


Tags:    

Similar News