குடிநீர் வழங்காததைக் கண்டித்து மாதர் சங்கத்தினர் முற்றுகைப் போராட்டம்
குடிநீர் வழங்காததைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்
குடிநீர் வழங்காததைக் கண்டித்து மாதர் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிநீர் வழங்காததைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் புதன்கிழமை போராட்டம் நடத்தினர்.
திருவரங்குளம் ஒன்றியம் கோவீலூர் கிராமத்திற்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் வழங்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் குடிநீர் வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து உடனடியாக குடிநீர் வழங்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் காலிக்குடங்களுடன் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு சங்த்தின் ஒன்றியப் பொருளாளர் நதியா தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் பி.சுசிலா, ஒன்றியத் தலைவர் வி.கலைச்செல்வி, துணைச் செயலாளர் கோமதி ஆகியோர் பேசினர்.
போராட்டத்தைத் தொடர்ந்து பேச்சுவார்தை நடத்திய அதிகாரிகள் இரண்டு நாட்களில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து சுமார் இரண்டு மணி நேரமாக நீடித்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.