புதுக்கோட்டை மாவட்டத்தில் 800 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்: அமைச்சர் வழங்கல்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஆலங்குடி பேரூராட்சிப் பகுதிகளில் 800 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஆலங்குடி பேரூராட்சிப் பகுதிகளில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை, மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் (08.09.2023) வழங்கினார்.
பின்னர் அமைச்சர் கூறியதாவது: பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் எண்ணற்றத் திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில் மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கிடவும், பள்ளிக்கு நாள்தோறும் உரிய நேரத்திற்கு சென்றுவருவதற்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஆலங்குடி பேரூராட்சிப் பகுதிகளில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.
அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், சிதம்பரவிடுதி அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 43 மாணவர்களுக்கும், 52 மாணவிகளுக்கும், சிலட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 49 மாணவர்களுக்கும், 56 மாணவிகளுக்கும், தாந்தாணி அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 16 மாணவர்களுக்கும், 20 மாணவிகளுக்கும் மற்றும் மற்றும் ஆலங்குடி பேரூராட்சியில், ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 264 மாணவர்களுக்கும், ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 300 மாணவிகளுக்கும் என ஆகமொத்தம் 800 மாணவ, மாணவிகளுக்கு ரூ.38,60,080 மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
எனவே மாணவ, மாணவிகள் அனைவரும் தமிழக அரசால் வழங்கப்படும் இத்தகைய மிதிவண்டி களை உரிய முறையில் பயன்படுத்துவதன் மூலம் பள்ளிக்கு சரியான நேரத்திற்குள் சென்று வருவதுடன், உடற்பயிற்சியாகவும் அமைகிறது என சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில், அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் ப.ஜஸ்டின் ஜெபராஜ், அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், மாவட்ட கல்வி அலுவலர் (அறந்தாங்கி) ராஜேஸ்வரி, அறந்தாங்கி பள்ளிக்கல்வி துணை ஆய்வாளர் இளையராஜா, தாந்தாணி ஒன்றியக்குழு உறுப்பினர் கருணாநிதி, வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரவேலன், அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்;