அரசுப்பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கு அமைச்சர் அடிக்கல்

மக்கள்நலத் திட்டங்களை அனைவரும் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்;

Update: 2023-05-03 15:00 GMT

 கொத்தமங்கலம் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணியை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், கொத்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்  சிவ.வீ.மெய்யநாதன்  இன்று (03.05.2023) அடிக்கல் நாட்டி, சேந்தன்குடியில் புதிய மின்மாற்றியினை துவக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனுக்காக எண்ணற்றத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி கிராமப் புறங்களில் உள்ள பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போது கொத்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மேலும் சேந்தன்குடியில் புதிய மின்மாற்றி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

எனவே இதுபோன்ற மக்கள்நலத் திட்டங்களை அனைவரும் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  தெரிவித்தார்.

இந்நிகழ்வுகளில், துணை ஆட்சியர் (பயிற்சி) ஜி.வி.ஜெயஸ்ரீ, திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் கோகுலகிருஷ்ணன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News