புதுக்கோட்டை அருகே அனுமதியின்றி வைத்திருந்த பட்டாசுகள் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன;

Update: 2023-11-10 11:15 GMT
பைல் படம்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியில் உரிமம் பெறாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியில் உரிமம் பெறாமல் அனுமதி இன்றி தீபாவளி பட்டாசுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து கறம்பக்குடி தாசில்தார் நாகநாதன் தலைமையில் வருவாய் துறை அலுவலர்களும் கறம்பக்குடி காவல் ஆய்வாளர்  செந்தூர் பாண்டியன் தலைமையில் போலீஸார் கறம்பக்குடியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே தனியாருக்கு சொந்தமான கடையில் பட்டாசுகள் விற்பனை செய்வது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து தாசில்தார் நாகநாத, காவல் ஆய்வாளர் செந்தூர்பாண்டியன் மற்றும் போலீஸார் அங்கு சென்று அதிரடி ஆய்வு செய்தனர்.

உரிமம் பெராமல் அனுமதி பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 3 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கறம்பக்குடி பேரூராட்சி பகுதியில் 13 பட்டாசு கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாகவும் கூடுதல் கடைகளில் விற்பனை செய்வது போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரங்களில் பாதுகாப்பற்ற வகையில் விற்பனை போன்ற விதிமீறல்கள் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

Tags:    

Similar News