வரும்முன் காப்போம் திட்ட முகாம்: கர்பிணி களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்

கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கி, கண்காட்சி அரங்குகளை மாவட்ட வருவாய் அலுவலர் பார்வையிட்டார்;

Update: 2023-09-07 04:30 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே செரியாலூர் ஜெமீன் கிராமத்தில் நடைபெற்ற கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாமில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குகிறார், மாவட்ட வருவாய் அலுவவர் மா. செல்வி

புதுக்கோட்டை மாவட்டம், செரியாலூர் ஜெமீன் ஊராட்சியில் ‘கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம்” மருத்துவ முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், செரியாலூர் ஜெமீன் ஊராட்சியில், ‘கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம்” மருத்துவ முகாமினை, மாவட்ட வருவாய் அலுவலர்  மா.செல்வி  துவக்கி வைத்து, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கி, கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர்  தெரிவித்ததாவது; முன்னாள் முதலமைச்சர் கலைஞரால் ஏழை, எளிய பொதுமக்கள் நோயற்ற நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் ‘கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம்” தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தினை மீண்டும் புதுப்பொலிவுடன் தற்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் ஏழை, எளிய பொதுமக்களுக்குத் தேவையான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் உள்ளிட்டவைகள் அவர்களின் வீட்டிற்கு அருகாமையிலேயே செய்துகொள்ள முடியும்.

அதன்படி  செரியாலூர் ஜெமீன் ஊராட்சியில், ‘கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம்” மருத்துவ முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. இம்முகாமில் பொதுமக்கள் பரிசோதனைகள் செய்து கொள்வதன் மூலம் நோய்கள் ஆரம்ப நிலையி லேயே கண்டறியப்பட்டு உரிய சிகிச்சைகள் அளிப்பதன் மூலம் விலைமதிப்பற்ற மனித உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.

எனவே, தமிழ்நாடு முதலமைச்சரால் செயல்படுத்தப்படும் இம்மருத்துவ முகாமினை பொதுமக்கள் அனைவரும் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி  தெரிவித்தார்.

இம்முகாமில், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.நமச்சிவாயம் (அறந்தாங்கி), புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், வட்டாட்சியர் விஸ்வநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆயிஷாராணி, ஊராட்சிமன்றத் தலைவர்கள்  அலமுகார்த்திகா (செரியாலூர் ஜெமீன்),  முகமதுதியாவுதின் (செரியாலூர் இனாம்;), உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News