ஆசிய தடகளப் போட்டி : முதலிடம் பெறும் தமிழக வீரர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு..!
ஆசிய தடகளப் போட்டியில் முதலிடம் பெறும் தமிழக வீரர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று நாமக்கல் எம்.பி. சின்ராஜ் அறிவித்துள்ளார்.;
திருச்செங்கோடு :
ஆசிய தடகளப் போட்டியில் பங்கேற்று முதலிடம் பெறும், தமிழக வீரர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்படும் என நாமக்கல் மாவட்ட தடகள சங்க தலைவர் எம்.பி., சின்ராஜ் தெரிவித்தார்.
தமிழ்நாடு தடகளச் சங்கம் மற்றும் திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்வி நிறுவனங்களின் சார்பில், 37-வது மாநில அளவிலான ஜூனியர் தடகளப் போட்டிகள் கேஎஸ்ஆர் கல்லூரியில் 4 நாட்கள் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 6,000 க்கும் மேற்நட்ட தடகள வீரர்கள் மற்றும் வீõங்கனைகள் போட்டிகளில் பங்கேற்றனர். போட்டிகள், 14,16,18 - 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு என 4 பிரிவுகளாக நடத்தப்பட்டன.
போட்டி நிறைவு விழா, நாமக்கல் மாவட்ட தடகளச் சங்க தலைவர் ஏ.கே.பி. சின்ராஜ் எம்.பி., தலைமயில் நடைபெற்றது. மாநில தடகள சங்க செயலாளர் லதா முன்னிலை வகித்தார். நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் சுமன், எமரிட்டிஸ் முதன்மை நிர்வாக அலுவலர் தியாகராஜ், கேஎஸ்ஆர் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் அகிலா, அண்ணாலைப் பல்லைக்கழக விளையாட்டுத்துறை தலைவர் செந்தில்வேலவன், கூடுதல் போலீஸ் எஸ்.பி. செல்வராஜ், திருச்செங்கோடு டிஎஸ்பி இமயவரம்பன், தமிழ்நாடு ஹாக்கி யூனிட் தலைவர் சேகர் மனோகரன், சென்னை அதலெடிக் அசோசியேசன் தலைவர் ரவி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற வீரர்கள் மற்றும் வீ ராங்கனைகளுக்கு பதக்கம் மற்றம் சான்றிதழ்களை வழங்கினார்.
போட்டிகளில், புதிய சாதனை படைத்த 7 வீரர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த வீரர்களுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன. மாணவர் பிரிவில் 241 புள்ளிகளுடனும், மாணவியர் பிரிவில் 219 புள்ளிகளுடனும், சென்னை அணி ஒட்டுமொத்த சாம்பியன்பட்டத்தை வென்றனர். போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர் கோவையில் நடைபெற உள்ள தேசிய அளிவிலான தடகளப் போட்டிகளில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளனர்.
பரிசு அறிவிப்பு :
அடுத்த மாதம் சீனாவில் நடைபெற உள்ள ஆசிய அளவிலான போட்டியில், இந்திய அணி சார்பில் தமிழகத்தில் இருந்து கலந்துகொண்டு முதலிடம் பெறும் வீரர்களுக்கு ரூ. 1 லட்சம், இரண்டாம் இடம் பெறும் வீரர்களுக்கு ரூ. 50 ஆயிரம், மூன்றாமிடம் பெறும் வீரர்களுக்கு ரூ. 25 ஆயிரம் வீதம் பரிசு வழங்கப்படும் என்று, நாமக்கல் மாவட்ட தடகள சங்கத் தலைவரும், எம்.பியுமான ஏ.கே.பி. சின்ராஜ் நிகழ்ச்சியில் தெரிவித்தார். முன்னதாக நாமக்கல் மாவட்ட தடகளச் சங்க இணை செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார். முடிவில் செயலாளர் வெங்கடாஜலபதி நன்றி கூறினார்.