நகை திருட்டில் சிக்கிய திருச்சி இளைஞர்
நகை திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட தந்தை மகன் இருவரும் சிசிடிவி காட்சியால் கைது;
பெரம்பலூர் மாவட்டம் நெற்குணத்தைச் சேர்ந்த 50 வயதான விவசாயி ராஜ்மோகன், கடந்த 15ம் தேதி சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வீரகனூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்திருந்த 4 பவுன் நகையை மீட்டார். அதையடுத்து, அந்த நகையுடன் ₹57,000 ரொக்கப் பணத்தையும் தனது ‘யுனிகான்’ பைக்கின் பெட்டியில் வைத்துவிட்டு, சாவியை எடுக்காமல் அருகிலுள்ள கடைக்குச் சென்று ஜூஸ் குடித்துவிட்டு திரும்பிய போது, பைக்கின் பெட்டி திறக்கப்பட்டு நகையும் பணமும் இல்லை என்பதை கண்டு நகை திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட தந்தை மகன் இருவரும் சிசிடிவி காட்சியால் கைதுஅதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில், வீரகனூர் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த வீடியோவில், இரண்டு நபர்கள் இணைந்து திருடும் காட்சிகள் தெளிவாக பதிவாகியிருந்தன.
தொடர்ந்த விசாரணையில், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த கணேசன் (62) மற்றும் அவரது மகன் ராகவன் (36) ஆகியோர் இந்த திருட்டில் ஈடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே, கணேசனை நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி போலீசார் ஒரு வேறு திருட்டு வழக்கில் கைது செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, அவரது மகனான ராகவனையும் நேற்று வீரகனூர் போலீசார் கைது செய்தனர். விசாரணையின் போது, ராகவன், தனது தந்தையுடன் சேர்ந்து இந்த திருட்டில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம், பொது மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், போலீசார் தொடர்ந்த விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.