அனுமதியற்ற தொழிற்சாலைகள் இடிக்கபட்டன - பவானியில் பரபரப்பு!
ஈரோடு மாவட்டம் பவானி அருகே இயங்கி வந்த அனுமதியற்ற டைகிங் (வண்ணப்பூசும்) தொழிற்சாலைகள் மீது அதிகாரிகள் அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்டனர்.;
பவானி அருகே அனுமதியில்லா 5 டைகிங் ஷெட்கள் இடிக்கப்பட்டது – சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக கடும் நடவடிக்கை :
ஈரோடு மாவட்டம் பவானி அருகே இயங்கி வந்த அனுமதியற்ற டைகிங் (வண்ணப்பூசும்) தொழிற்சாலைகள் மீது அதிகாரிகள் அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்டனர். சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த 5 டைகிங் ஷெட்கள், சுற்றுச்சூழல் துறையின் ஆலோசனையின் பேரில் இடித்து அகற்றப்பட்டன.
இந்த நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் காவல்துறை இணைந்து மேற்கொண்டது. பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்ததன் பின்னர், அதிகாரிகள் திடீரென சென்று, சட்டவிரோதமாக இயங்கி வந்த கட்டடங்களை இடித்து அகற்றினர்.
இத்தகைய நடவடிக்கைகள் பவானி ஆற்றின் நீர்த் தரம் மேம்படவும், விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் மாசுபடாமல் பாதுகாக்கவும் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.