ராசிபுரம் அரசுப்பள்ளி புதிய கட்டிடங்கள்: அமைச்சர் திறப்பு..!

ராசிபுரம் அருகே அரசுப் பள்ளி கட்டிடங்களை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்.

Update: 2023-11-21 12:30 GMT

ராசிபுரம் அருகே அரசு பள்ளி புதிய வகுப்பறைகளை திறந்து வைத்த, அமைச்சர் மதிவேந்தன், குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார்.

ராசிபுரம் :

ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 38 லட்சம் மதிப்பீட்டில், 2 பள்ளிகளில் புதியதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடங்களை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், போடிநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் மோளப்பாளையம் ஊராட்சி, பழனியப்பனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளில் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடங்கள் திறப்புவிழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். 

தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்து பேசியதாவது:

ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், போடிநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கனிமங்கள் மற்றும் சிறுகனிமங்கள் நிதித் திட்டத்தின் 2022-23 கீழ், ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக, 2 வகுப்பறை  கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.  இதன் மூலம் இப்பள்ளியில் பயிலும் 104 மாணவர்கள், 105 மாணவியர்கள் என மொத்தம் ௨09 பேர்  பயன்பெறுவர்கள்.

மோளப்பாளையம் ஊராட்சி, பழனியப்பனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கனிமங்கள் மற்றும் சிறுகனிமங்கள் நிதித் திட்டத்தின் 2022-23 கீழ், ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக 2 வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதன்மூலம் இப்பள்ளியில் படிக்கும் 29 மாணவர்கள் பயன்பெறுவர்கள் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் ராசிபுரம் ஒன்றியக்குழுத் தலைவர் ஜெகநாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை திட்ட இயக்குநர் சிவக்குமார், முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News