ஊரடங்கில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் சமூக ஆர்வலர்

நாகையில் ஊரடங்கால் உணவின்றி தவித்து வரும் முதியோர்கள், ஆதரவற்றோர்களுக்கு சமூக ஆர்வலர்கள் உணவு பொட்டலங்கல் வழங்கினர்.

Update: 2021-05-14 10:42 GMT

தமிழகத்தில் நிலவிவரும் கொரனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகமெங்கும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது இதனால் சுற்றுலா தலங்களிலும் பேருந்து நிலையங்களிலும் வசித்து வரும் ஆதரவற்றோர் முதியோர்கள் உணவின்றி தவித்து வருகின்றனர்

அவர்களுக்கு உதவிடும் வகையில் ஊரடங்கு தொடங்கிய நாள் முதல் வேளாங்கண்ணி பேராலயம் , நாகப்பட்டிணம் புதிய பேருந்து நிலையம், நாகூர் தர்கா, உள்ளிட்ட பகுதிகளிலும், சாலை ஓரங்களிலும் வசித்துவரும் 300க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி களுக்கு 3 வேளையும் திட்டச்சேரியை சேர்ந்த நியூ லைப் டிரஸ்ட் சார்பில் உணவு பொட்டலங்களை நியூ லைப் டிரஸ்ட் நிர்வாகி கலைவாணன் வழங்கிவருகிறார்.

Tags:    

Similar News