நாகை வெள்ளையாற்றில் மணல் திருட்டு, லாரியை சிறைபிடித்த கிராம மக்கள்
நாகை மாவட்டம் வெள்ளையாற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.;
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் சோழவித்யாபுரம்- பாலக்குறிச்சி வெள்ளையாற்றில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது . இந் நிலையில் ஆற்றிலிருந்து வண்டல் மண் அனுமதியின்றி வெளியில் எடுத்துச் செல்லப்படுவதை அறிந்த அப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக கூறி அனுமதியின்றி மணலை எடுத்துச் செல்ல முயன்ற 7 டாரஸ் லாரி ,ஜேசிபி வாகனங்களை சிறைபிடித்தனர் .
இதுகுறித்து தகவல் அறிந்த கீழையூர் போலீசார் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்ததன் பேரில் பொதுமக்கள் சிறைப்பிடித்த லாரிகளை விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.