வேளாங்கண்ணியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தடுப்புசி முகாம்
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமை கலெக்டர் பிரவீன் நாயர் தொடங்கி வைத்தார்.;
நாகை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி முகாம் மாவட்ட நிர்வாகம் அதிகப்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அன்பு இல்லத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கொரோனா தடுப்புசி முகாமை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் தொடங்கி வைத்தார்.
நாகை மாவட்டத்தில் இன்று முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கொரோனா தடுப்புசிமுகம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், நாள்தோறும் ஊராட்சி பேரூராட்சி நகராட்சிகளில் சிறப்பு முகாம் நடைபெறும் எனவும், இதனை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.