வேப்பனப்பள்ளி அருகே கஞ்சா கடத்திய 2 பேர் கைது
வேப்பனப்பள்ளி அருகே, 12 ஆயிரம் மதிப்பிலான கஞ்சாவை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி போலீஸ் எஸ்.ஐ.சந்துரு மற்றும் போலீசார், நேற்றுமாலை வேப்பனப்பள்ளி அடுத்த பண்ணப்பள்ளி கூட்ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அந்த பகுதியில் கஞ்சா வைத்துக் கொண்டிருந்த தீர்த்தம் பகுதியைச் சேர்ந்த முருகன் மற்றும் நாராயணசாமி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
மேலும், அவர்கள் இருவரிடம் இருந்து 12000 ரூபாய் மதிப்பிலான ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.