குடிபோதையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

தளி அருகே குடிபோதையில் மொபைல் போனை உடைத்து, வாலிபர் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2021-08-30 14:15 GMT

பைல் படம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மகாலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டு ஒரு பெண் குழந்தையுடன் கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அடுத்த பெள்ளூர் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஸ்டீபனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. நேற்றுமுன்தினம் குடிபோதையில் வீட்டிற்கு வந்த அவர், அவரது செல்போனை கீழே போட்டு உடைத்தார். பின்னர் மனமுடைந்த அவர் வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி மகாலட்சுமி நேற்று கொடுத்த புகாரின் பேரில் தளி போலீஸ் எஸ்ஐ கதிர்வேல் இன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

Similar News