குமரியில் தொடரும் கனமழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் நீடிக்கும் கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது.;
குமரியில், மழை நீரில் தத்தளித்து சென்ற கார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, தக்கலை, மார்த்தாண்டம் உட்பட மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய விடிய கனமழை பெய்தது. மழையானது இன்றும் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த கனமழையானது மாவட்டத்தின் மலையோர பகுதிகளிலும், தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு 1, சிற்றாறு 2, உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து பெருமளவில் அதிகரித்து உள்ளது. இதனிடையே தொடர்ந்து நீடித்து வரும் கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் அலுவலகங்கள் செல்வோர், வாகன ஒட்டிகள் என அனைத்து தரப்பு மக்களும், கனமழை காரணமாக பாதிப்பை சந்தித்தனர். தாழ்வான பகுதிகளை மழைநீர் சூழ்ந்து அவதியை உண்டாக்கியுள்ளது.