போலி தங்க நகைகளை வங்கியில் வைத்த மோசடி வழக்கில் மேலும் இருவர் கைது

காஞ்சிபுரத்தில் உள்ள மூன்று வங்கிகளில் போலி நகைகளை வைத்து இரண்டரை கோடி மோசடி செய்து தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-05-24 14:04 GMT

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் விவசாயிகள் பொதுமக்கள் தொழில் முனைவோர் என பலர் தங்களது வியாபார விருத்திக்காக தங்க நகைகளை அடகு வைத்து பணம் பெற்று செல்வதும் வாடிக்கை.

இந்நிலையில் அடகு வைத்த நகைகளை வங்கியின் நகை மதிப்பீட்டாளர் மற்றும் மேலாளர் தலைமையில் வருடா வரும் தலைமை அலுவலக நகை மதிப்பீட்டு குழு சரிபார்ப்பு நிகழ்ச்சியும் நடக்கும்.

அவ்வகையில் காஞ்சிபுரம் ஏனாத்தூர் மற்றும் கம்மவார் பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியின் நகை மதிப்பீட்டு குழு சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டபோது போலி நகைகளை தங்கமூலம் பூசி அதனை வங்கியில் வைத்து கடன் பெற்று சென்றது தெரியவந்தது. 

இதன் அறிக்கையின் அடிப்படையில் காஞ்சிபுரம் இந்தியன் வங்கியின் மேலாளர் ராஜாராம் காஞ்சிபுரம் எஸ்.பி அலுவலகத்தில்,  வங்கிகளில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ 2.50 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாகவும், அந்த மோசடியில் ஈடுபட்டுள்ள நபர்களை கைது செய்து பணத்தினை மீட்டு தரக்கோரி எஸ்.பி சண்முகம் அவர்களிடம் புகார் மனு அளித்தார்.

புகார் இணை பெற்றுக் கொண்டு மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி மணிமேகலைக்கு பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு நடந்த ஏப்ரல் மாதம் இது தொடர்பாக மேகநாதன் , சுரேந்திர குமார் மற்றும் பிரகாஷ் ஆகிய மூன்று நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேற்கொண்ட நடவடிக்கையின் பேரில் அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் சிலரை மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் தேடி வந்த நிலையில், இந்தக் குற்றத்திற்கு உடந்தையாக செயல்பட்ட அரக்கோணம் மாவட்டம் பல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரையும், இதேபோல் திம்ம சமுத்திரம் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரையும் குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 

இவர்களிடம் விசாரணை மேற்கொண்ட பின் நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். 

இந்த இரண்டரை கோடி ரூபாய் மோசடி வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இதற்கு மூளையாக செயல்பட்ட சென்னை சேர்ந்த நபரை தற்போது மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த மோசடி வழக்கில் குறைந்தபட்சம் 10 நபர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News