உடற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-06-06 06:50 GMT

உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் சங்க  மாவட்ட செயற்குழு கூட்டம் மற்றும் மாநில பொதுக்குழு கூட்டம் காஞ்சிபுரத்தில்  நடைபெற்றது.

தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற் கல்வி இயக்குனர் சங்கம் சார்பில் மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே. வி பள்ளியில்  மாநில செயல் தலைவர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது.

பொதுக்குழுவிக்கு வருகை புரிந்த உறுப்பினர்களை மாவட்ட தலைவர் கோபிநாத் மற்றும் மாவட்ட செயலாளர் பாண்டியன் வரவேற்று பேசினார்கள். இந்த மாநில செயற்குழு கூட்டத்தில்  மாநிலத் தலைவர் சங்கரபெருமாள்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.மாநில செயற்குழு கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட பொருளாளர் கென்னடி ஆண்டறிக்கை வாசித்தார்.

இதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள், உடற்கல்வி ஆசிரியர்களின் தற்போதைய நிலை, பள்ளி கல்வித்துறை, மாநில அரசுக்கு வைக்க வேண்டிய கோரிக்கைகள் குறித்து உறுப்பினர்களுக்கு விளக்க உரை அளித்தனர்.


இதனையடுத்து மாநில பொதுக்குழு கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் குறைந்தபட்சம் ஒரு உடற்கல்வி ஆசிரியர் மேல்நிலைப் பள்ளிகளில் ஒரு உடற்கல்வி இயக்குனர் பணியிடம் என்பதை உறுதி செய்ய வேண்டும் , பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தேவை அறிந்து தரமான விளையாட்டு உபகரணங்கள் வழங்கிட வேண்டும் , பகுதி நேர ஆசிரியர்களை காலவரை ஊதியத்தில் நியமனம் செய்ய வேண்டும் , அரசாணை எண் 177 நாள் 13.10.2016 ஐ திருத்தம் செய்து உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்களுக்கு நியமன கல்வி தகுதிக்கு மேல் பெற்ற உயர்கல்வியினை வரிசைபடுத்தாமல் இரண்டு ஊக்க ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 14 கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.

இந்த மாநில பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தந்த 50 உடற்கல்வி ஆசிரியைகள் மற்றும் 40 ஆசிரியர்கள் ஆகியோருக்கு மாவட்ட துணை தலைவர் முருகேசன் நன்றி தெரிவித்தார்.

Tags:    

Similar News