காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரகத்தில் நாளை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரகத்தில் நாளை பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

Update: 2024-06-09 08:24 GMT

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் அரங்கம்.  

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை காலை 10 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை பொதுமக்கள் தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிப்பது வழக்கம். 

மேலும் பொதுமக்கள் அளிக்கும் குறைதீர்க்கும் மனுவினை பார்வையிடும் ஆட்சியர் உரிய அலுவலருக்கு பரிந்துரைகள் செய்து அம்மனுவிற்கான ஒப்புகை சீட்டு வழங்குவர்.

இந்நிலையில் கடந்த  இரு மாதங்களுக்கு முன்பு 18 ஆவது மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதால் அன்று முதல் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல்படுத்தப்படுவத்தபட்டு வந்தது.

இக்காலங்களில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்படும் பெட்டியில் தங்கள் மனுக்களை செலுத்தி கைபேசியில் வரும் ஒப்புகை சீட்டை பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது.

அவ்வகையில் கடந்த 50 தினங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் இருந்ததால் எந்தவித மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மற்றும் மக்கள் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா என அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்தது. 

கடந்த நான்காம் தேதி காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்கு பதிவுகள் அனைத்தும் எண்ணி முடிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் ஐந்தாம் தேதி மாலை முதல் தேர்தல் நன்னடத்தை விதிகள் விலக்கிக் கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதனைத் தொடர்ந்து கடந்த இரு தினங்களாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரை மக்கள் சந்திக்கும் நேரங்களில் உரிய அனுமதி பெற்று தங்கள் குறைகளை தெரிவித்து இருந்தனர். 

மேலும் நாளை முதல் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என தெரியவந்துள்ளது. நாளை முதல் வழக்கம்போல் பொதுமக்கள் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தித்து மனுக்கள் அளிக்கலாம்.

இரு மாதங்களுக்குப் பிறகு நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் என்பதால் அதிகளவில் மனுக்களை பொதுமக்கள் அளிக்கலாம் எனவும் தற்போது தண்ணீர் பிரச்சனை சில பகுதிகளை காணப்பட்டு வருவதும் கழிவுநீர் அடைப்பு உள்ளதாக கூறி சாலை மறியல் செய்த மக்கள் என பலர் தரப்பினரும் மனுக்களை அளிக்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News