3 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் கடத்தல் : 2 பேர் கைது
காய்கறி வாகனத்தில் 3 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்களை கடத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.;
கைது செய்யப்பட்ட யஸ்வந்த் மற்றும் சோம் சேகர்.
ஈரோடு மாவட்டம் பர்கூர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து தமிழகம் நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையின் போது வாகனத்தில் காய்கறி மூட்டைகளுக்கு இடையே ஹான்ஸ், குட்கா போன்ற தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட சுமார் 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து வாகனத்தில் வந்த மைசூர் பகுதியைச் சேர்ந்த யஸ்வந்த் மற்றும் நரசிபுரா பகுதியைச் சேர்ந்த சோம் சேகர் ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் மற்றும் புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.