பென்னாகரம் அருகே பாம்பு கடித்து பெண் சாவு: போலீசார் விசாரணை
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பாம்பு கடித்து பெண் ஒருவர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை ந டத்தி வருகின்றனர்.;
தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்த பாப்பனேரிபள்ளம் பகுதியை சேர்ந்தவர் ஜடையன் இவரது மனைவி சின்னபாப்பா வயது 60. இவர் தனது உறவினர்களுடன் கடந்த 2ஆம் தேதி விவசாய தோட்டத்தில் தடினிகொட்டய் அறுத்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக பாம்பு கடித்தது. உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை உறவினர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த சின்ன பாப்பா இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து புகாரின் பேரில் பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.