புரட்டாசிக்கு 3 நாட்களே உள்ள நிலையில் ஆட்டுக்கறி, மீன்கள் விலை உயர்வு

புரட்டாசி மாதம் வருவதற்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் தர்மபுரி மாவட்ட இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதியது.;

Update: 2021-09-13 02:46 GMT

இறைச்சி கடையில் கூடிய கூட்டம்.

ஆவணி மாதம் முடிந்து புரட்டாசி மாதம் பிறக்க இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் நேற்று கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் இறைச்சி வாங்குவதற்காக அசைவப் பிரியர்கள் கூட்டம் கறி கடைகளில் அலைமோதுகிறது.

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது என்பதால் அந்த மாதத்தில் பெரும்பாலான இந்துக்கள் விரதம் இருப்பார்கள். கூடுமானவரை அசைவ உணவுகளை முற்றிலும் தவிர்த்துவிடுவார்கள். இதனால் மற்ற நாட்களைக் காட்டிலும் புரட்டாசி மாதத்தில் மட்டும் ஆட்டுக்கறி, கோழிக்கறி மற்றும் மீன்களின் விலை வீழ்ச்சியடையும்.

இந்நிலையில் வருகின்ற வியாழன் தினத்தோடு ஆவணி மாதம் முடிந்து புரட்டாசி மாதம் புரட்டாசி மாதம் துவங்குவதால் நேற்று கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அசைவப் பிரியர்கள் தங்களுக்கு விருப்பமான இறைச்சிகளை வாங்க கடைகளில் கூட்டம் அலைமோதியது.

இதனிடையே கடந்த வாரம் வஞ்சிரம் மீன் ஒரு கிலோ ரூ.650-க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.800 வரை விற்கப்படுகிறது. அதேபோல் ஆட்டுக்கறி கிலோ ஒன்று ரூ.650-க்கு விற்பனையான நிலையில் 700 முதல் 800 வரை விலை உயர்ந்துள்ளது. இருப்பினும் விலையை பற்றி அசைவப் பிரியர்கள் பொருட்படுத்தவில்லை.

பென்னாகரம், ஏரியூர் தருமபுரி, இலக்கியம்பட்டி, ஒட்டப்பட்டி, வள்ளுவர் நகர், மற்றும் தர்மபுரி நகரப் பேருந்துகள் இயங்கும் மீன் மார்க்கெட்களில் அதிகாலை முதலே மீன்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் குவிந்தனர். இதனால் வழக்கத்தை விட இன்று கூடுதல் பரபரப்பு அங்கு காணப்பட்டது.

இதனிடையே தருமபுரி நகராட்சி ஊழியர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அங்கு வருபவர்களை அறிவுறுத்தி வருகின்றனர். உகந்தது என்பதால் அந்த மாதத்தில் பெரும்பாலான இந்துக்கள் விரதம் இருப்பார்கள். கூடுமானவரை அசைவ உணவுகளை முற்றிலும் தவிர்த்துவிடுவார்கள். இதனால் மற்ற நாட்களைக் காட்டிலும் புரட்டாசி மாதத்தில் மட்டும் ஆட்டுக்கறி, கோழிக்கறி மற்றும் மீன்களின் விலை வீழ்ச்சியடையும்.

Tags:    

Similar News