ஒக்கேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக சரிவு

இன்று காலை நிலவரப்படி இரண்டு அணைகளில் இருந்து மொத்தமாக வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 11,558 கன அடியாக உள்ளது.

Update: 2021-09-07 05:00 GMT

ஒக்கேனக்கல் ஐந்தருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஓக்கேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து வினாடிக்கு 19 ஆயிரம் கனஅடியாக இருந்தது. அது தற்போது 16 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் தர்மபுரி மாவட்டம் ஒக்கேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்வது நின்றதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறையத் தொடங்கியது.

நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மீண்டும் கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, பிலிகுண்டுலு, கேரட்டி, ராசிமணல் திட்டு உள்ளிட்ட பகுதிகளில் மழை குறைந்தது. இதன் காரணமாக நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. அதன்படி நேற்று மாலை 5 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 19 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 11ஆயிரத்து 558கன அடியாக உள்ளது

கிருஷ்ணராஜ சாகர் அணை:

மொத்த கொள்ளளவு 124.80 அடி

தற்போதைய நீர் மட்டம் 116.02அடி

நீர்வரத்து10223கன அடி

நீர் வெளியேற்றம் 10858கன அடி

கபிணி அணை:

மொத்த கொள்ளளவு 84.00 அடி

தற்போதைய நீர் மட்டம் 79.71 அடி

நீர்வரத்து 4567கன அடி

நீர் வெளியேற்றம் 700கன அடி

இன்று காலை நிலவரப்படி இரண்டு அணைகளில் இருந்து மொத்தமாக வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 11,558 கன அடியாக உள்ளது. இருந்த போதிலும் மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு தற்போது 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் அசம்பாவித சம்பவங்களை தடுக்க போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News