கர்நாடக அணைகளில் நீர் திறப்பு குறைப்பு; ஒகேனக்கலில் நீர்வரத்து சரிந்தது

கர்நாடக அணைகளின் நீர்வரத்து குறைந்ததால், ஒகேனேக்கல்லில் நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக குறைந்தது.

Update: 2021-07-30 15:00 GMT

ஒகேனக்கல்லில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான குடகு, உத்தர கன்னடா, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனையடுத்து, அணைகளின் பாதுகாப்பு கருதி, கபினி மற்றும் கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

நேற்று காலை, கபினியிலிருந்து வினாடிக்கு, 8ஆயிரத்து, 500கன அடி, கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து, 5 ஆயிரத்து, 298 கன அடி என மொத்தம், 13 ஆயிரத்து, 698கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில், இன்று மாலை, 5 மணிக்கு வினாடிக்கு, 20 ஆயிரம் கன அடியாக அடியாக சரிந்தது.

Tags:    

Similar News