தமிழகதிற்கு காவிரி நீர்வரத்து வினாடிக்கு 1000 கன அடி சரிவு
காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 2500 கன அடியிலிருந்து 1500 கன அடியாக சரிவு.;
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 10000 கன அடி வரை திறக்கப்பட்டது. தொடர்ந்து மழை குறைந்ததால், அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது.
இதனால் கர்நாடக அணைகளிலிருந்து, காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு, நேற்று மாலை வினாடிக்கு 2000 கன அடி திறக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 2500 கன அடியாக இருந்த நீர்வத்து சரிந்து, இன்று வினாடிக்கு 1500 கன அடியாக குறைந்துள்ளது. இதனால் ஒகேனக்கல் அருவியில் தண்ணீர் குறைவாகவே வருகிறது. மேலும் இந்த நீர்வரத்து குறைய வாய்ப்புள்ளதாக மத்திய நீர்வள அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.