ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடியாக சரிவு
ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.;
தென்மேற்கு பருவமழை கர்நாடகா,கேரள மாநிலங்களில் மழை பெய்து வந்தது. இதன் காரணமாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துவந்தது.
இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதால், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 9582 கனஅடி தண்ணீரும், கபினி அணையிலிருந்து 700கனஅடி என மொத்தம் 10ஆயிரத்து 282 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது வினாடிக்கு தற்போது அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைத்து விடப்பட்டுள்ளது. நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.
இன்று காலை 8மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 9ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டியது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை காவிரியின் நுழைவிடமான தமிழக கர்நாடக எல்லையில் உள்ள பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.