ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து இன்று காலை 15 ஆயிரம் கன அடியாக சரிவு

ஒகேனக்கல்லுக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 15 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது.

Update: 2021-10-30 05:30 GMT

ஒகேனக்கல் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரத்தால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது . இதனால் அணை பாதுகாப்பு கருதி கபினி கேஆர்எஸ் அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் நீர்ப்பிடிப்பு பகுதியை ஒட்டியுள்ள பிலிகுண்டுலு, அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை குறைந்ததால் நீர்வரத்து சரிந்துள்ளது.

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை வினாடிக்கு 31 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 20 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. ஆனால் இன்று காலை நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. இருந்தபோதிலும் ஒகேனக்கல்லில் உள்ள சினி பால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

Tags:    

Similar News