ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் ஆயிரம் கனஅடியாக குறைவு
கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைவு காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 12 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
தென்மேற்கு பருவமழை கர்நாடகா,கேரள மாநிலங்களில் தீவிர ம் அடைந்ததால் இதன் காரணமாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வந்தது.
இதனால் கபினி கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வந்த நிலையில், தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் நேற்று முன்தினம் வினாடிக்கு 15 ஆயரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தற்போது அணையில் நீர்திறப்பு குறைவு காரணமாக நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது.
இன்று காலை 10மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 12 ஆயிரம் கனஅடியாக சரிந்து உள்ளது. இருப்பினும் மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை காவிரியின் நுழைவிடமான தமிழக கர்நாடக எல்லையில் உள்ள பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.