பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த எம்.எல்.ஏ

உம்மயம்பட்டியில் பள்ளி க்கு வந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை பா.ம.க எம் எல் ஏ வெங்கடேஸ்வரன் அசத்தல்.

Update: 2021-11-01 18:00 GMT

உம்மயம்பட்டியில் பள்ளி க்கு வந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை பா.ம.க எம் எல் ஏ வெங்கடேஸ்வரன் அசத்தல்

தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 1-8ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு 01.11.2021 இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. கிராமப்புற மாணவர்களை வரவேற்கும் வகையில், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், இண்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்குச் சென்ற தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஷ்வரன் அவர்கள் தொடக்கப்பள்ளிக்கு வருகை புரிந்த மாணவர்களுக்கு மலர் கொத்து, இனிப்பு வழங்கி மாலை அணிவித்து  வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து, இண்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, இண்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நத்தஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி போன்ற பள்ளிகளுக்கு நேரடியாக சென்று மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

பள்ளி அறைகளில் நாற்காலியில் அமர்ந்து பாடத்தை கவனிக்கும் வகையில் பென்ச், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, நவீன கழிவறை வசதி, நவீன தொழில்நுட்ப பலகை போன்ற வசதிகளை ஏற்படுத்த மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.

மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென அப்போது தெரிவித்தார். பின்னர், டொக்கு போதனஅள்ளி ஊராட்சி - தாத நாயக்கம்பட்டி,  தொப்பூர் ஊராட்சி - உம்மியம்பட்டி அரசு துவக்கப்பள்ளிகளின் மாணவர்களை மேளதாளங்களுடன், மாலை அணிவித்து வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில், மாநில துணைத் தலைவர் பெ.சாந்தமூர்த்தி, மாநில இளைஞர் சங்க செயலாளர் எம்.முருகசாமி, மாவட்ட செயலாளர் பெரியசாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் ப.சண்முகம், ஒன்றிய செயலாளர்கள் - ப.பெ.சக்தி, வ.அறிவு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும், மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல், பள்ளியின் தலைமையாசிரியர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News