பாப்பிரெட்டிப்பட்டி அருகே வாட்டர் ஆப்பிள் ஆப்பிள் சாகுபடியில் ஆசிரியர் அசத்தல்
பாப்பிரெட்டிப்பட்டி அருகே குளிர் பகுதிகளில் விளையும் வாட்டர் ஆப்பிள் ஆப்பிள் சாகுபடியில் ஆசிரியர் அசத்தி வருகிறார்.;
தர்மபுரி மாவட்டத்தின் சீதோஷன நிலை, கோடைக்கு மட்டும் இன்றி குளிர் பகுதிகளில் விளையும் பயிர்களையும் சாகுபடிக்கு ஏற்ற நிலையாக உள்ளது.
இதனால், மாவட்டத்தில் பாலை வனத்தில் சாகுபடி தரும் பேரிச்சம்பழம் கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன்பே சாகுபடி செய்யப்பட்டது. மேலும் கடந்த சில ஆண்டுகளாக இண்டூர் பகுதியில் அரசு ஆசிரியர் ஒருவர், குளிர் பிரதேஷத்தில் சாகுபடி தரக்கூடிய டிராக்கன் பழங்களை சாகுபடி செய்து குறிப்பிட தக்கவகையில் வருவாய் பெற்று வருகிறார். இந்நிலையில் கடந்த, பாப்பாரப்பட்டி அடுத்த திகிலோடை சேர்ந்த ஆசிரியர் சரவணன், 35, வாட்டர் ஆப்பிள் சாகுபடியில் அசத்தி வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு படம் எடுக்க, தற்காலிக அடிப்படையில் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். வழக்காமான விவசாய பயிர்களில் போதிய வருவாய் இல்லாததால் வருவாய் தரும் சாகுபடிக்கு மாற வேண்டும் என முடிவு செய்தேன். இதற்கான தேடல்களின் முடிவில், ஐந்தாண்டுகளுக்கு முன் வாட்டர் ஆப்பிள் சாகுபடி குறித்து தெரியவந்தது.
ஓசூரில் உள்ள நர்சரி ஒன்றில், 100 வாட்டர் ஆப்பிள் மரக்கன்றுகளை வாங்கி கடந்த, அரை நிலத்தில் நடவு செய்து நர்சரியில் கூறிய வழிமுறையுடன் மரக்கன்றுகளை பராமரித்து வந்தேன். இரண்டு ஆண்டுகளில் இம்மரங்களில் வாட்டர் ஆப்பிள் காய்ப்புக்கு வந்தது. இதில், 50 மரங்களில் சிகப்பு, 50 மரங்களில் வெள்ளை வாட்டர் ஆப்பிள்கள் அறுவடைக்கு வந்தது. ஆண்டுக்கு, மூன்று முறை அறுவடைக்கு வரும் வாட்டர் ஆப்பிளால் எனக்கு ஆண்டுக்கு பராமரிப்பு செலவு போ, 2 லட்ச ரூபாய் வருவாய் கிடைக்கிறது. வாட்டர் ஆப்பிளை விவசாயிகள் மட்டும் இன்றி பொதுமக்களும் நேரடியாக எங்களிடம் வாங்கி செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.