தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு மண்டபத்தில் மாணவர்கள் தூய்மைப் பணி

பென்னாகரம் அரசு கல்லூரி மாணவர்கள் தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு மண்டப வளாகத்தில் தூய்மைப் பணி மேற்கொண்டனர்

Update: 2022-01-02 06:45 GMT

பென்னாகரம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் பாப்பாரப்பட்டி தியாகி சுப்பிரமணிய சிவா வளாகத்தில் நடைபெற்றது

பென்னாகரம் அரசு கல்லூரி மாணவர்கள் தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு மண்டப வளாகத்தில் தூய்மைப் பணி மேற்கொண்டனர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பேராசிரியர் வெங்கடாஜலம் தலைமையில் கடந்த 27ஆம் தேதி முதல் ஜனவரி 2ந்தேதி இன்று வரை நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கிராமங்களில் தூய்மைப் பணி உள்ளிட்ட சேவைகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்று 6-ம் நாளில் பாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு மணிமண்டபம் வளாகத்தை சுத்தம் செய்தனர்.

தொடர்ந்து முட்புதராக செடிகள் வளர்ந்து கிடந்த மைதானத்தில் செடிகளை வெட்டி தூய்மைப்படுத்தியும் மரக் கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்கு மண்ணை சரி செய்தும் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டனர். தொடர்ந்து கடந்த 6 நாட்களாக பல்வேறு சேவைகள் செய்து வரும் கலைக் கல்லூரி மாணவர்கள் இன்று பாப்பாரப்பட்டி அருகே உள்ள மலை கிராமத்தில் தங்களது சேவையை செய்து வருகின்றனர்.

இந்த நாட்டு நலப்பணித் திட்ட முகாமில் உள்ள 50 மாணவ மாணவிகளுக்கும் தினமும் ஒவ்வொரு தலைப்பில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பெண் குழந்தைகள் எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கும் அதனை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வதற்கும் உரிய ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்.



Tags:    

Similar News