நடப்பனஹள்ளி கருப்பசாமி கோவிலில் ஆவணி அமாவாசை சிறப்பு பூஜை
நடப்பனஹள்ளி கருப்பசாமி கோவிலில் ஆவணி மாத அமாவாசை சிறப்பு பூஜை நடைபெற்றது.;
நடப்பனஹள்ளியில் உள்ள கருப்பசாமிக்கு அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டம், இன்டூர் அடுத்த நடப்பனஹள்ளி கிராமத்தில் கருப்புசாமி கோவில் அமைந்துள்ளது.
இந்தக் கோவிலில் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று மூலவருக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. பின்னர் மூலவர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து படிபூஜை, பக்தர்களுக்கு வாக்கு சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கருப்பசாமி க்கு பொங்கலிட்டு பூஜை செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
மேலும் பம்பை வாத்தியங்கள் முழங்க வாணவேடிக்கை நடைபெற்றது . இதில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வேண்டுதல்களை நிறைவேற்றிய மூலவருக்கு பக்தர்கள் ஆடு, கோழி, மது மற்றும் சுருட்டு, மிளகாய்ப்பொடி ஆகியவை நேர்த்திகடன்களாக செலுத்தி சாமியை வழிபட்டனர்.