பாதுகாப்பில் அலட்சியம்: ஒகேனக்கல்லில் 3 பரிசல் ஓட்டிகளின் உரிமம் ரத்து

ஒகேனக்கல்லில் பயணிகளை பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சவாரி அழைத்துச்சென்ற 3 பரிசல் ஓட்டிகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டது

Update: 2022-03-30 04:00 GMT

பாதுகாப்பு உபகரணங்களின்றி பயணிகளை ஏற்றி சவாரி சென்றதாக ஒகேனக்கல்லில் 3 பரிசல் ஓட்டிகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

ஒகேனக்கல்லுக்கு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் பரிசல் பயணம் செல்லும்போது அவர்களுக்கு லைப் ஜாக்கெட் வழங்கப்படுகிறது. அதை அணியாமல் சுற்றுலா பயணிகளில் சிலர், பரிசல் பயணம் மேற்கொள்கின்றனர்.

இதுகுறித்து, பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு புகார் தெரிவிக்கப் பட்டது. இந்நிலையில், லைப் ஜாக்கெட் அணிவிக்காமல் பரிசலில் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்ற தருமன், வெங்கடேசன், ஸ்ரீரங்கன் ஆகியோரின் பரிசல் உரிமம் ரத்து செய்யப்பட் டது. பரிசல் ஓட்டிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, பென்னாகரம் பி.டி.ஓ.வடிவேல் எச்சரித்துள்ளார்.

Tags:    

Similar News