பென்னாகரத்தில் முனியப்பன் கோவில் சிலைக்கு தீ வைப்பு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே, முனியப்பன் கோவில் சிலைக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.;
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் டூ ஒகேனக்கல் செல்லும் பைபாஸ் சாலையில் முனியப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள சாமி சிலைக்கு, அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று இரவு தீ வைத்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள், கோவில் முன்பாக கூடி, தீ வைத்த விஷமிகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்த தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று, போலீசாருக்கு அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
தீ வைப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசித் தேடி வருகின்றனர். இதே போன்று இரண்டு வருடங்களுக்கு முன்பு, முனியப்பன் கோவில் சாமி சிலை அவமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.